ஸ்மார்ட் போன் நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். ஆனால், பெரும்பாலும் நாம் ஒரு சிறிய தவறைச் செய்வதால் அது நமக்கு பெரிய தீங்கை விளைவிப்பதாக அமைகிறது அந்த வகையில் பெரும்பாலானவர்கள் தங்கள் மொபைல் கவரில் பணத்தை வைத்திருப்பது ஆகும் . இது பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றினாலும், மிகவும் ஆபத்தானது. தற்போது, பல மொபைல் போன்கள் வெடிப்பது அல்லது தீப்பிடித்த சம்பவங்கள் ஏற்பட கவனக்குறைவே காரணம் என்று கூறப்படுகிறது..
மொபைல் போன் மிகவும் சூடாகும்போது வெடிக்கும் பிரச்சனை எழுகிறது. பலர் நீண்ட நேரம் தொலைபேசியைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் மொபைலுக்கு சார்ஜ் போட்டுவிட்டு மறந்துவிடுகிறார்கள். இதன் விளைவாக, மொபைலில் ஒரு காந்தப்புலம் உருவாகிறது. இந்த நேரத்தில், மொபைலின் பின்புற அட்டையில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு இருந்தால், அது ஆபத்தை ஏற்படுத்துகிறது.
மொபைலால் உருவாக்கப்பட்ட காந்தப்புலம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் உள்ள காந்த பட்டை தரவை சேதப்படுத்தும். தொலைபேசியின் செயலி அல்லது பேட்டரியில் அதிகப்படியான அழுத்தம் தீயை ஏற்படுத்தும். மேலும், தவறான சார்ஜரைப் பயன்படுத்துவது பேட்டரி வெடிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மட்டுமல்ல. ரூபாய் நோட்டுகளை தொலைபேசி கவரின் பின்னால் வைப்பதும் பாதுகாப்பானது அல்ல. ரூபாய் நோட்டுகளில் பல வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை தொலைபேசியில் உருவாகும் வெப்பத்தை வெளியேற அனுமதிக்காது. அத்தகைய சூழ்நிலையில், வெப்பம் தொலைபேசியின் உள்ளே சிக்கி வெடிப்பை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆகையால், ரூபாய் நோட்டுகள், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை மொபைல் கவரின் பின்னால் வைப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக தனி கார்டு ஹோல்டர் அல்லது பணப்பையை பயன்படுத்தலாம்
