Friday, August 8, 2025
HTML tutorial

ஜூஸ் மட்டுமே உணவாக சாப்பிட்டால் என்ன ஆகும்?

இன்றைய காலத்தில் பலர் “திரவ உணவுமுறை” (Liquid only diet) எனப்படும் உணவு முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். உடல் எடையை குறைக்க திரவ உணவுமுறை சரியானதா? என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நன்மைகள்

திரவ உணவுகள் குறைந்த கலோரி கொண்டிருப்பதால், உடல் எடை குறைப்பதற்கு உதவும். உடலில் நீர் மற்றும் சில மினரல்களையும் வழங்கும். செரிமானத்திற்கு எளிதாக இருக்கும்.

தீமைகள்

ஜூஸ் மட்டுமே உணவாக சாப்பிடுவதால் உடலுக்கு தற்காலிகமாக சில நன்மைகள் காணப்படலாம், ஆனால் 3 நாட்களுக்கு கூட இது பின்பற்றினால் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது என்றாலும், நார்ச்சத்து, புரதம் போன்ற அடிப்படை ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும்.

குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைந்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து, குடல் மற்றும் வாயின் ஆரோக்கியம் பாதிக்கும்.

ஜூஸ் மட்டும் உணவாக சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். முழு ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News