Sunday, December 28, 2025

மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்., த.வெ.க நிர்வாகி அஜிதாவுக்கு என்னாச்சு?

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, அஜிதா ஆக்னல் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் நிர்வாகியாக இருக்கும் நிலையில், இவருக்கு சமீபத்தில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படாததால் தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்கு சென்று த.வெ.க தலைவர் விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 25-ந்தேதி அஜிதா ஆக்னல் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அஜிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அஜிதா ஆக்னலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை அவசர சிகிச்சை வார்டுக்கு இடமாற்றம் செய்தனர். அங்கு அவருக்கு மருத்துவர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அரசியல் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

Related News

Latest News