Wednesday, October 1, 2025

G.V.க்கு, ARR கொடுத்த கிப்ட்!! என்ன தெரியுமா?

நடிகரும், பிரபல இசையமைப்பாளருமானவர் ஜி.வி.பிரகாஷ். இவர் ஒரு நடிகராக அவர் மீது கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் இசையமைப்பாளராக மக்களை ரசிக்க வைத்த வண்ணம் உள்ளார்.

இவர் கடந்த 2006ம் ஆண்டு வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியவர். ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருதுகளில் வாத்தி திரைப்படத்திற்காக 2வது முறையாக விருது வாங்கியுள்ளார்.

முதலில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தனது முதல் தேசிய விருதை பெற்றார். 2 முறை தேசிய விருது பெற்றதுக்காக ஏ.ஆர்.ரகுமான் ஒரு பரிசு கொடுத்துள்ளார். அதாவது அவர் பயன்படுத்திய வெள்ளை நிற Pianoவை ஜி.வி.பிரகாஷ்-க்கு பரிசாக கொடுத்துள்ளாராம். இதனை அவரது சமூகவலைதத்தில் போட்டோவுடன் அறிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News