பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-
விஜய் என்ன தவறு செய்தார்?.விஜய் நான்கு மணி நேரம் பிரசாரக் கூட்டத்திற்கு தாமதமாக வந்தது ஒரு குற்றமா? எம்ஜிஆர் 36 மணி நேரம் தாமதமாக வந்தாலும் மக்கள் காத்திருந்து பார்ப்பதை நேரில் பார்த்தவன் நான். அது ஒரு குற்றம் என்று சொல்ல முடியுமா?
வரும் வழியில் கூட்டம் இருந்திருக்கலாம். அதனால் கூட தாமதம் ஆகியிருக்கலாம். ஆனால் அது கிரிமினல் குற்றம் இல்லை. ஆனால் கரூரில் அந்த இடத்தில் அனுமதி கொடுத்த எஸ்.பி.யை முதலில் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
விஜய் மீது எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஆனால் இந்த கரூர் விவகாரத்தில் அவருக்கு நான் துணையாக நிற்பேன் என கூறியுள்ளார்.