மோசமான வீடு ஒன்று அதிக விலைக்கு விற்பனையாகி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிலுள்ள நோயே பள்ளத்தாக்கில், ஆடம்பரமான சுற்றுப்புறத்தில் அமைந்த ஒரு பாழடைந்த வீடு 1.97 மில்லியன் டாலர் தொகைக்கு சமீபத்தில் விற்பனையாகியுள்ளது.
ரியல் எஸ்டேட் பட்டியலில் சிறந்த பிளாக்கில் உள்ள மோசமான வீடு என்று இந்த வீடு வர்ணிக்கப்பட்டிருந்ததுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததற்குக் காரணம்.
1900 ஆம் ஆண்டில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. 1.6 மில்லியன் டாலருக்கு விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பைத் தாண்டி அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ள இந்த வீட்டில் படுக்கையறை இல்லை. ஒரேயொரு குளியலறையும் சமையலறையும் மட்டுமே உள்ளது.
செங்குத்தான நடைபாதை உள்ள இந்த வீடு 2 ஆயிரத்து 848 சதுர அடி பரப்பளவு கொண்டுள்ளது.
பழைய வீட்டை வாங்கிப் புதுப்பித்துப் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது அதிக விலைக்கு விற்றுவிடலாம் என்பதே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதற்கானக் காரணமென்று கூறப்படுகிறது.