என்னாது… 13 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறையா? நோட் பண்ணிக்கோங்க..

ஏப்ரல் மாதம் முடிந்து மே மாதம் தொடங்கும் இந்த காலத்தில், பலரும் வங்கி தொடர்பான முக்கிய பணிகளை திட்டமிட்டு இருப்பார்கள். ஆனால் இந்த மாதத்தில் வங்கிகளுக்கு கணிசமான அளவில் விடுமுறை இருப்பது முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சமாகும். எனவே, தேவையான வங்கி சேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்வது மிகவும் அவசியமாகிறது. இல்லையெனில், கடைசி நேரத்தில் சிரமங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலின்படி, மே மாதத்தில் வார இறுதி நாட்கள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், மேலும் பல்வேறு பண்டிகைகள் காரணமாக வங்கிகள் செயல்படாது. மொத்தத்தில் சுமார் 13 நாட்கள் வரை வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம். இதனால், கிளைக்கு நேரில் சென்று செய்ய வேண்டிய பணிகளை சரியான நாளில் முடிப்பது அவசியமாகிறது.

மே 1, 3, 9, 10, 16, 17, 23, 24, 26, 27, 28 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதில் சில நாட்கள் நாடு முழுவதும் பொதுவிடுமுறையாக இருக்கும் நிலையில், சில நாட்கள் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தும். உதாரணமாக, மே 1 தொழிலாளர் தினம் மற்றும் மகாராஷ்டிரா தினம் என்பதால் பல இடங்களில் வங்கிகள் இயங்காது.

எந்த தேதிகளில் வங்கிகள் மூடப்படும் என்பதை முன்கூட்டியே சரிபார்த்து கொள்ளுதல் மிகவும் பயனுள்ளதாகும். குறிப்பாக, பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள், செக் கிளியரன்ஸ், கடன் தொடர்பான பணிகள் போன்றவை தாமதமாகாமல் இருக்க முன்பே திட்டமிடுவது அவசியம்.

அதே நேரத்தில், வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும் டிஜிட்டல் சேவைகள் தொடர்ந்து கிடைக்கும். நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யுபிஐ மற்றும் ஏடிஎம் வசதிகள் மூலம் அவசர தேவைகளை நிறைவேற்றலாம். இருந்தாலும், கிளைக்கு சென்று செய்ய வேண்டிய முக்கிய பணிகளை முன்கூட்டியே முடித்துவிடுவது பாதுகாப்பான தேர்வாகும்.

Related News

Latest News