தங்க நகை அணிந்தால் ரூ.50 ஆயிரம் அபராதம்.! இந்தியாவில் இப்படி ஒரு கிராமமா?

தங்கத்திற்கு இந்தியர்கள் கொடுப்பது போல, வேறு எந்த வெளிநாட்டவரும் அவ்வளவு ஹைப் கொடுக்க மாட்டார்கள் என்று கூறலாம். காரணம், தங்க நகைகளை இங்கிருக்கும் அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கிறோம்.

இந்நிலையில் உத்தரகாண்டில், சக்ராதா என்கிற கிராமம் இருக்கிறது. இங்கிருக்கும் ஒரு உள்ளூர் பஞ்சாயத்தில்தான் வித்தியாசமான இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பெண்கள் வெளியில் வரும் போது தாலி, மூக்குத்தி, கம்மல் தவிர வேறு எதையும் அணியக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தவிர்த்த வேறு நகைகள் எதையாவது வெளியில் வரும் போது அணிந்தால், அவர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீப காலமாக, தங்கத்தின் விலையானது கூடுதலாக இருக்கிறது. இதனால், நகை வாங்க முடியாத சிரமத்தில் பல பேர் இருக்கின்றனர். இப்படி, நகை வாங்க முடியாமல் இருப்பவர்களின் சங்கடத்தை தீர்க்கதான், வித்தியாசமான இந்த உத்தரவை, கிராமத்தின் பஞ்சயாத்தில் பெரியவர்கள் வழங்கி இருக்கின்றனர்.

Related News

Latest News