2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை இழந்தாலும் தமிழ்நாட்டில் ஒருபோதும் இருமொழி கொள்கையை விட்டுதர மாட்டோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நிதி நிலை அறிக்கை தாக்கலின் போது பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மகளிர் நலத் திட்டங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு கோடியே பதினைந்து லட்ச குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு 3,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு, 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை இழந்தாலும் தமிழ்நாட்டில் ஒருபோதும் இருமொழி கொள்கையை விட்டுதர மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.