Tuesday, March 11, 2025

“நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்கமாட்டோம்” – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதிரடி

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரூ. 1,285 கோடி மதிப்பிட்டீல் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஏற்கனவே முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது : “இந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ. 2 ஆயிரம் கோடி கல்வி நிதியை தருவோம் என மத்திய கல்வி அமைச்சர் திமிராக பேசியுள்ளார். தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை அளிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

கல்விக்குள் மாணவர்களை கொண்டுவர முயற்சி செய்யாமல், கல்வியில் இருந்து மாணவர்களை நீக்கம் செய்வதற்கான அனைத்து செயல் திட்டங்களும் புதிய கல்விக்கொள்கையில் உள்ளது. 2 ஆயிரம் கோடி ரூபாய் அல்ல 10 ஆயிரம் கோடி ரூபாய் தந்தாலும் நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்கமாட்டோம்.

நாவடக்கம் இல்லாமல் மத்திய அமைச்சர் பேசிய பேச்சை அரைமணி நேரத்தில் திரும்ப பெற வைத்துள்ளார்கள் நமது தமிழ்நாட்டு எம்.பிக்கள்” என அவர் பேசினார்.

Latest news