பஹல்காம் தாக்குதலின் ஒவ்வொரு இழப்பிற்கும் தக்க பதிலடி கொடுப்போம், ஒருத்தரையும் சும்மா விட மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் பேசியிருந்தார். இதையொட்டி தற்போது ”ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடியை கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை அதன் வேர்களில் இருந்து ஒழிக்க இந்தியா உறுதியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். பஹல்காமில் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி தான் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று தெரிவித்துள்ள அவர், இந்தியா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க மோடி அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.