அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், இன்று த.வெ.க தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்ததால் அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாதிப்பில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவை செங்கோட்டையன் நம்பி இருந்தாக கூறுவது ஏற்புடையது அல்ல எனவும் கூறினார். செங்கோட்டையனை பாஜக இயக்குவதாக கூறுவது தவறு என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பாஜக மிகப்பெரிய கட்சி என்றும், ஒரு கவுன்சிலர் கூட இல்லாத த.வெ.கவுடன் தங்களை ஒப்பிடக்கூடாது என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் மூன்றாவது அணி, நான்காவது அணி என எத்தனை அணி அமைந்தாலும், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக அணி வெற்றி வாகை சூடும் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
