Saturday, March 29, 2025

“திராவிட நோய்க்கு மருந்து கண்டுபிடித்தே ஆக வேண்டும்” – நடிகை கஸ்தூரி பேச்சு

தமிழகத்தில் பல்லாண்டு காலமாகவே, பிராமணர்களை இழிவுபடுத்துவதும், அச்சுறுத்துவதும், சாதியை குறிப்பிட்டு பேசுவதும் தொடர்ந்து வருகிறது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் பல்லாண்டு காலமாகவே, பிராமணர்களை இழிவுபடுத்துவதும், அச்சுறுத்துவதும், சாதியை குறிப்பிட்டு பேசுவதும் தொடர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.

ஆட்டிப்படைக்கும் திராவிடத்தின் நோய்க்கு மருந்து கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று கூறிய அவர், நோயாளி இறந்த பிறகு அதற்கான மருந்து கண்டுபிடித்து பயன் இருக்காது என்றும் கூறினார். மேலும், தமிழக முதலமைச்சர் பிராமணர்களுக்கென நலவாரியம் அமைத்தால் 5 லட்சம் பிராமணர் வாக்குகளை திமுகவிற்கு பெற்றுத்தருவேன் என எஸ்.வி. சேகர் கூறியது குறித்த கேள்விக்கு, அவர் ஒரு நல்ல காமெடி நடிகர் என்றும் விமர்சித்தார்.

Latest news