Saturday, February 21, 2026

‘வெனிசுலா அதிபரை நாடு கடத்திவிட்டோம்’ – அதிபர் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. அந்நாடு மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. வெனிசுலா ஆட்சியாளர்கள் மீது, அதிபர் டிரம்ப் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதல் காரணமாக வெனிசுலா ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா வெனிசுலா மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்திய பின்னர், வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மதுரோவின் மனைவியும் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Related News

Latest News