Friday, April 25, 2025

‘நாங்களும் போருக்கு ரெடி!’ தயார் நிலையில் இந்திய முப்படைகள்! சீறிப் பாயும் ஏவுகணைகள்! என்னவோ நடக்கப்போகிறது!

நெஞ்சை நொறுக்கி இதயங்களை கணக்க செய்த பஹல்காம் தாக்குதல் 25-க்கும் இந்திய உயிர்களை ரத்தவெள்ளத்தில் மிதக்கவிட்டு துடிதுடிக்க கொன்று தீர்த்தது நாடுமுழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஓரிரு நாட்களாக உலகத்தின் பார்வை பஹல்காம் மீதே பதிந்துள்ளது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல வகையான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது மட்டுமல்லாமல் இந்தத் கொடூர தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி தந்தே ஆக வேண்டும் எனவும், முப்படைகள் தயார் நிலையில் இருக்கவும் இந்திய அரசு உத்தரவிட்டிருப்பது இரு நாடுகளிடையே போர் மூளும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மட்டுமல்லாமல் கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்டிருப்பதால் இது பாகிஸ்தான் / போருக்கு அடிபோடுகிறதா என்கிற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதற்றத்துக்கு நடுவே “நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை” என்று கூறுவதைப்போல தளத்தில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய நடுத்தர ரக ஏவுகணை INS போர்க்கப்பலில் வெற்றிகரமாக சோதனை செய்து முடிக்கப்பட்டுள்ளது. Target-ஐ துல்லியமாக தாக்கியதாக இந்திய கடற்படை தனது X தளத்தில் பதிவிட்டிருப்பது “நாங்களும் போருக்கு தயார்” என்று இந்தியா சொல்வதாகவே சர்வதேச அரங்கில் பார்க்கப்படுகிறது. மேலும் இது நமது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் இந்த வெற்றி மற்றொரு மைல்கல் என்று குறிப்பிடப்பட்டிருப்பதோடு INS போர்க்கப்பலில் இருந்து இலக்குகள் தாக்கப்பட்டு அழிக்கப்படும் காணொலியும் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் உலகின் அடுத்த போர் மூள்கிறதா என்ற பதற்றத்தை கிளப்பி

Latest news