Sunday, August 31, 2025
HTML tutorial

வாட்ஸ் அப்பில் பிளாக் செய்தவர்களைக் கண்டுபிடிக்கும் வழி

இன்றைக்கு வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்களே கிடையாது என்று சொல்லுமளவுக்கு அதன் பயன்பாடு நீக்கமற நிறைந்துள்ளது. காலை எழுந்ததுமுதல் இரவு உறங்கச் செல்லும்வரை ஆன்ட்ராய்டு செல்போன் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அத்தியாவசியத் தகவல் பரிமாற்றம் முதல் தொழில், அலுவலகம், பொழுதுபோக்குத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் சிறந்த வழியாக வாட்ஸ் அப் பயன்படுகிறது.

எந்நேரமும் வாட்ஸ் அப் வந்துகொண்டே இருப்பதாலும், தனது விருப்பத்துக்கு மாறான தகவல்களை சிலர் அனுப்பிக்கொண்டே இருப்பதாலும் அதனைத் தவிர்க்கும்பொருட்டு வாஸ்ட் அப்பை சிலர் பிளாக் செய்துவிடுவர். அப்படி நம்முடைய வாட்ஸ் அப்பும் பிளாக்செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை எளிதில் அறிந்துகொள்ளலாம்.

பிளாக் செய்தவரின் LAST SEEN மற்றும் ONLINE விவரங்கள் தெரியாது. இதை மட்டும் வைத்து நம்முடைய வாட்ஸ் அப் பிளாக் செய்யப்பட்டுள்ளது என்னும் முடிவுக்கு வர இயலாது. LAST SEEN மற்றும் ONLINE விவரங்களை மறைக்க PRIVATE SETTINGSல் வசதி உள்ளது.

உங்களை பிளாக் செய்தவருக்கு நீங்கள் மெஸேஜ் அனுப்பினால் ஒரு டிக் மட்டுமே உங்கள் செல்போனில் தெரியும். நீங்கள் அனுப்பிய மெஸேஜ் வாட்ஸ் அப்பைக் கவனிக்கும் அதிகாரிக்குச் சென்றடைந்து விட்டது என்று அர்த்தம். ஆனால், நீங்கள் அனுப்பிய நபருக்குச் சென்று அடையவில்லை என்பதே உண்மை.

உங்களை பிளாக் செய்தவரின் PROFILE படம் உங்கள் மொபைலில் தெரியாது. அதுமட்டுமல்ல, அவர் புதுப்பித்துப் பதிவிட்டுள்ள எந்த விவரமும் உங்களின் மொபைலில் தெரியாது. இதைக்கொண்டும் உங்கள் செல்போன் வாட்ஸ் அப் பிளாக் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.

உங்கள் வாட்ஸ் அப்பைப் பிளாக் செய்தவரின் எண்ணை நீங்கள் வாட்ஸ் அப்மூலம் தொடர்புகொண்டால் ரிங் போகாது. இதுபோன்ற அறிகுறிகளை வைத்து உங்களின் செல்போன் வாட்ஸ் அப் பிளாக் செய்யப்பட்டுள்ளது என்பதை நிச்சயமாகத் தெரிந்துகொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News