வாட்ஸ் ஆப்பின் பிஸ்ட் அப்டேட் …!

330
Advertisement

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போனும், வாட்ஸ் அப்பும் இல்லாத இளைஞர்களை பார்க்கவே முடியாது . அலுவலக வேலை முதல் கொண்டு நண்பர்களுடன் கலந்துரையாடுவது வரை வாட்ஸ் அப்பில் தான் நடக்கிறது.

ஏன் காலையில் எழுந்ததும் யார் என்ன ஸ்டேட்டஸ் வைக்கிறார்கள்? பிடித்தமானவர்களுக்கு குட் மார்னின் முதல் கொண்டு, இரவு தூங்கும்போது குட் நைட் சொல்லி தூங்கும் பலரும் உண்டு. இதற்கு இளைஞர்கள் மட்டும் அல்ல, வயதானவர்களும் இதில் மிகுந்த ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் , போட்டி நிறுவனங்களை முந்திக்கொண்டு பயனர்களுக்கு முதலாவதாக வசதிகளை அறிமுகம் செய்யும் விதமாகவும் அவ்வப்போது பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்திவருகிறது வாட்ஸ் ஆப் நிறுவனம்.

இந்தவகையில் புதிய வசதியை கொண்டுவர உள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.தற்போது உள்ள வசதியின் படி , 100 எம்.பிக்கு மட்டுமே ஃபைல்களை அனுப்பமுடியும் . இதையடுத்து வாட்ஸ் அப் பயனர்கள் இந்த வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் ,தற்போது அந்நிறுவனம் புதிய வசதி ஒன்றைக் கொண்டுவருள்ளதாக தெரிவித்து உள்ளது.

அதன்படி, 100 எம்.பிக்குப் பதிலாக இனிமேல் 2ஜிபி வரைக்கும்கூட ஃபைல்களை அனுப்பிக் கொள்ளமுடியும். இதற்கான சோதனை நடந்துவருவதாகவும் விரையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இது கொண்டுவரப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலானது வாட்ஸ் அப் பயனர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.