கோடை காலத்தில் அதிகளவில் விற்கப்படும் பழங்களில் ஒன்றான தர்பூசணியில் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கருத்துக்கு பழ வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இதுவரை எந்த இடத்திலும் ரசாயன ஊசி போடப்பட்ட தர்பூசணி பழங்கள் விற்கப்படவில்லை என்று அவர் விவரித்தார். தாம் கூட தொடர்ந்து தர்பூசணி பழம் சாப்பிடுவதாகவும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறிய சதீஷ், தாங்கள் விவசாயிகளுக்கோ, வியாபாரிகளுக்கோ எதிரானவர்கள் அல்ல என்று விளக்கம் அளித்தார்.