Wednesday, July 16, 2025

இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி : நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ் பாடி ஊராட்சி மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு அப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் பாழடைந்து விரிசல்கள் ஏற்பட்டு செடி கொடிகள் படர்ந்து எந்த நேரத்திலும் இடியும் தருவாயில் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. மேலும் அப்பகுதியில் மக்களுக்கு இந்த பாழடைந்த இடியும் தருவாயில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே ஊராட்சி நிர்வாகம் அல்லது துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டிடத்தை இடித்து புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news