Saturday, December 27, 2025

சென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பணிக்காக, தேனாம்பேட்டை மண்டலம், ஆர்.கே சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 10-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Related News

Latest News