Wednesday, February 5, 2025

ஹெலிகாப்டர் மீது மோதிய பயணிகள் விமானம் : 67 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நேற்று சிறிய ரக பயணிகள் விமானம் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. விமானமும், ஹெலிகாப்டரும் நடுவானில் மோதியதில் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பொடோமாக் ஆற்றில் விழுந்தன.

விமானத்தில் இருந்த 60 பயணிகள், நான்கு பணியாளர்கள் மற்றும் ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் என மொத்தம் 67 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும். விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தில் இருந்த ஒருவர்கூட உயிர்பிழைக்காதது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest news