தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால் உடல்நலத்திற்கு கேடு எனக் கூறப்படும் கோக் பானம் தலைமுடி பராமரிப்பில் ஆச்சர்யமூட்டும் விளைவுகளை தருகிறது என்றால் நம்பமுடிகிறதா?
இந்த முறை சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருவதால் பலரும் கோக் கொண்டு தலைமுடியை கழுவி முயற்சி செய்து பார்த்து வருகின்றனர். ஆனால், உண்மையில் அவ்வாறு செய்வது அறிவியல் பூர்வமாக பலனளிக்குமா என்பதை இத்தொகுப்பு விவரிக்கிறது.
கோக்கில் உள்ள கார்போனேட் வேதிப்பொருள் வறட்சியான மற்றும் கட்டுப்படுத்த முடியாத முடியை மிருதுவாக்கும் தன்மை உடையது. மேலும் pH அளவு மிகவும் குறைவான பாஸ்பாரிக் அமிலம் கோக்கில் உள்ளது. இந்த அமிலம் தலைமுடியின் மேற்புற தோலுக்கு வலுவூட்டி உறுதியாக்குகிறது.
தலைமுடியில் கோக்கை ஊற்றி பத்துநிமிடம் கழித்து எப்போதும் போல ஷாம்பூ தேய்த்து குளித்தால் மிருதுவான மற்றும் ஊட்டம் பெற்ற முடியை பெறலாம் என கூறப்படுகிறது.
கோக்கில் உள்ள சக்கரை தலைமுடியை அடர்த்தியாக காட்சியளிக்க வைக்கும் என்பதாலும் பலரும் இந்த முறையை பின்பற்றி வருகின்றனர்.
எனினும், தலைமுடியில் ஊற்றப்பட்ட கோக் முற்றிலுமாக கழுவப்பட வாய்ப்பில்லை எனவும், முடியில் தங்கி விடும் வேதிப்பொருட்கள் நீண்ட நாள் பயன்பாட்டில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.