Friday, April 4, 2025

மக்களவையில் நிறைவேறியது வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா

வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் கடந்த ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்தது. இதையடுத்து வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Latest news