தலைமுடி நீளமா இருக்கவேண்டும் என்பதுதான் பலரின் ஆசை. இதற்காக சந்தையில் உள்ள விலையுயர்ந்த எண்ணெய்களை நாடாமல், இயற்கையான வழிகளில் உங்கள் முடியை வளர்க்கலாம். வெந்தயம் முடி வளர்ச்சிக்கு சிறந்த தீர்வாக அமைகின்றன. இவை பட்ஜெட் ஃப்ரெண்ட்லியாகவும், நீண்ட கால தலைமுடி ஆரோக்கியத்தை வழங்க உதவுகிறது.
தலையில் வெந்தயம் பயன்படுத்துவதால் முடி உதிர்தலைக் குறைக்கவும், முடி வளர்ச்சியைத் தூண்டவும், பொடுகுத் தொல்லையை நீக்கவும், முடியை வலுப்படுத்தவும் உதவும்.
வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தற்போது பார்க்கலாம்.
முதலில் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அதை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக எடுத்துக்கொள்ளவும். இந்த பேஸ்டை உச்சந்தலையில் இருந்து அனைத்து இடத்திலும் தடவி,பிறகு மெதுவாக மசாஜ் செய்யவும்.பின்னர் சுமார் 30 நிமிடங்கள் முதல் 35 நிமிடம் வரை ஊறவைத்த, பிறகு லேசான ஷாம்பூவால் தலைமுடியை கழுவவும்.
இவ்வாறு வாரம் இரண்டு அல்லது ஒரு முறை பயன்படுத்துவது, முடி உதிர்வதைக் குறைக்கவும், முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், பொடுகு மற்றும் வறட்சியை நீக்கவும் உதவுகிறது.
குறிப்பாக முடி உதிர்வுக்கான காரணங்கள் மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் அல்லது மரபணு அமைப்பு போன்ற பிற பல காரணங்களாகவும் இருக்கலாம். எனவே, வெந்தயத்தைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் முடி உதிர்வதற்கான மூல காரணத்தைக் கண்டறிய மருத்துவரை அணுகுவது நல்லது.