மாணவர்களின் நினைவுத் திறன் வேற லெவல்-ல அதிகரிக்கணுமா? அதற்கான உணவு லிஸ்ட் ‘இது தான்!’

தேர்வு காலம் நெருங்கியுள்ள நிலையில், மாணவர்கள் அதிக கவனத்துடன் படிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நேரத்தில் நினைவுத்திறனை அதிகரிக்க சரியான உணவுமுறை முக்கிய பங்காற்றுகிறது என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

முதன்மையாக, மூளைக்குத் தேவையான சக்தியை அளிக்கும் உணவுகள் அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் வால்நட், பாதாம், பிஸ்தா, சியா விதைகள் போன்ற கோட்டை வகைகள் முக்கியமானவையாக கருதப்படுகிறது. இவையெல்லாம் ‘ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள்’ நிறைந்தவை என்பதால் மூளையின் செயல்பாட்டை தூண்டுவதாக கூறப்படுகிறது.

அதேபோல், பச்சை காய்கறிகள், குறிப்பாக பசலைக்கீரை, முருங்கைக்கீரை, கொத்தமல்லி போன்றவை ‘விட்டமின் கே’ மற்றும் ‘ஃபோலேட்’ நிறைந்துள்ளதால் நினைவாற்றலை வளர்க்க உதவக் கூடும். மேலும், பழங்களில், மாதுளை, ஆப்பிள், வாழை, திராட்சை போன்றவற்றில் உள்ள சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மூளைக்கு சீரான இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகின்றன.

மீன் வகைகள், குறிப்பாக கிழாங்கா மீன், மத்தி மீன் போன்றவை மூளையின் நரம்பு செயல்பாட்டை மேம்படுத்தும் திறன் கொண்டவை என ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அதே நேரத்தில், அதிக எண்ணெய் கொண்டவை, ஜங்க் ஃபுட் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

தண்ணீர் போதுமான அளவில் குடிப்பது, உடலின் நீர் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ளவது கவனச் சிதறலை குறைக்க உதவுகிறது. மேலும், பால் மற்றும் மோரில் உள்ள கால்சியம் மற்றும் புரதம் மூளைக்குச் சக்தி அளிக்கின்றன.

மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, ‘மாணவர்கள் தினசரி சத்தான காலை உணவை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு, போதுமான உறக்கம், மற்றும் மன அமைதி ஆகிய  மூன்றும் சேர்ந்து நினைவுத்திறனை சிறப்பாக வளர்க்கும்’ என்பதாகும்.

Related News

Latest News