புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பிய பூங்காவில் நடைப்பயிற்சி கட்டணம் 500ல் இருந்து 250 ஆக குறைக்கப்படவுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தொல்காப்பியப் பூங்காவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு ஓா் அமா்வுக்கு 250 போ் பாா்வையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா் என்றும் நடைப்பயிற்சிக்காக 365 நாள்களும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனா் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காலை, மாலை இரு வேளைகளில் நடைப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நிா்ணயிக்கப்பட்ட அளவை எட்டியதால், புதியவா்களுக்கு அனுமதி வழங்க இயலாத நிலை உள்ளது. இந்த நிலையில், தற்போதுள்ள 500 என்ற எண்ணிக்கையிலான நடைப்பயிற்சி அனுமதியை, பிப்ரவரி 1ம் தேதி முதல் 3 ஆயிரமாக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நடைப்பயிற்சி கட்டணம் 500ல் இருந்து 250 ஆக குறைக்கப்படவுள்ளது. இதேபோல, 3 மாதங்களுக்கான கட்டணம் ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 750 ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
