தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் படிவங்களை வினியோகம் செய்து அதை பூர்த்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டு அடுத்த குமாரமங்கலம் நாடார் தெருவில் செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய கணக்கெடுப்பு படிவங்கள் குவிந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் கண்ணன், 87 கவுண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சுபாதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதையடுத்து கோவிலில் வைக்கப்பட்டிருந்த 300 படிவங்களையும் சேகரித்து எடுத்து சென்றனர்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடந்து வரும் நிலையில் வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய கணக்கீடு படிவங்கள் கோவிலில் கேட்பாரற்று கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
