Sunday, April 20, 2025

இலங்கை ‘அரசியல்’ குடும்பத்தில் ‘Entry’ கொடுத்த VJ பிரியங்கா?

தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமணம் தான், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் Hot Topic ஆக உள்ளது. பிரியங்காவின் கணவர் வசி DJவாக இருப்பதோடு, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

பிரியங்காவின் திருமணம் குறித்த செய்தி அறிந்ததும், பெரும்பாலானோரின் கேள்வி அவரது கணவரின் வயது என்ன? என்பதாகத் தான் இருந்தது. ஏனெனில் திருமண மேடையில் கூட வசி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தான் இருந்தார்.

இதைப்பார்த்து சிலர் விமர்சனம் செய்தாலும், திருமணம் பிரியங்காவின் தனிப்பட்ட உரிமை. அதை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை என்று, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரியங்காவிற்கு 32 வயதாகிறது. அவரின் கணவர் வசிக்கு 42 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வசி இலங்கையின் அரசியல் குடும்ப பின்னணியில், இருந்து வந்தவர் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தவரும், இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருமான, மறைந்த இரா.சம்பந்தனின் தங்கையின் மகன் தான் வசியாம். ஈழத் தமிழரான வசி குடும்பத்தினருடன் திரிகோணமலையில் வசித்தவராம். அங்கே ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமொன்றை நடத்தி வந்துள்ளார். கலை நிகழ்ச்சிகளுக்காக பிரியங்கா இலங்கை சென்றபோது, இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

Latest news