Tuesday, January 27, 2026

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் !! அப்போ சூப்பர் ஸ்டார் படம்?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர்.சி. இவர் தற்போது, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களே பாக்கி இருக்கிறது. இப்படத்தின் பணிகளை முடித்துவிட்டு, ரஜினி படத்தினை இயக்கவுள்ளார் சுந்தர்.சி என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது.

இதற்கிடையே, திடீரென்று விஷால் தரப்பில் இருந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கவிருப்பதை அறிவித்திருக்கிறார்கள். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில் ‘ஆம்பள’, ‘ஆக்‌ஷன்’ மற்றும் ‘மதகஜராஜா’ ஆகிய படங்களின் காட்சிகளைக் கொண்டு உருவாக்கி இருக்கிறார்கள்.

ஒரு புறம் இந்த வீடியோ இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது. மறு புறம், ரஜினி படத்தினை இயக்கப் போவது யார் என்ற கேள்வியும் எழுப்பி வருகிறது.

ஆனால், சுந்தர்.சி தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரையும் வரவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது

Related News

Latest News