Wednesday, July 23, 2025

15000 ஆண்டுகளாக அழியாமல் இருக்கும் வைரஸ்கள்…சீனா தரும் அடுத்த பீதி

சீனாவில் தோன்றி உலகத்தையே நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கும்
கோவிட் 19 வைரஸயே இன்னும் அழிக்க முடியாமல் இருக்கும் நிலையில்,
அடுத்த அதிர்ச்சி கலந்த பீதியைத் தந்துள்ளது சீனா.

சீனாவில் 15000 ஆண்டுகளாக அழியாமல் இருக்கும் வைரஸ்களைத்
தற்போது கண்டுபிடித்துள்ள தகவல் வைரலாகி வருகிறது-

திபெத்திய பீடபூமியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பனிக்கட்டிகளில்
இந்த வைரஸ்கள் உறைந்திருந்ததால் அழியாமல் இருப்பதாகவும், இவை
15000 ஆண்டுகளுக்கு முந்தியது என்றும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இவை இன்னும் அழியாமல் இருப்பதாகக் கூறப்படுவதுதான்
பீதியையும் அதிர்ச்சியையும் கிளப்பியுள்ளது.

பனிப்பாறைகளை ஆய்வுசெய்யும் விஞ்ஞானிகள் இந்த
வைரஸ்களைக் கண்டறிந்துள்ளனர். இன்றுவரைப் பட்டியலிட்டுள்ள
வைரஸ்களில் இந்த வைரஸ் இல்லையென்று இந்த விஞ்ஞானிகள்
கூறியுள்ளதுதான் பீதியை அதிகரித்துள்ளது.

இந்த ஆய்வு முடிவு மைக்ரோபயோமி என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பனிப்பாறைகள் படிப்படியாக உருவானவை என்றும்,
அவற்றின்மீது தூசிகளுடன் வைரஸ்களும் படிந்துள்ளன என்றும்
ஒஹியோ மாநிலப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் பணியில்
ஈடுபட்டு வரும் பைர்ட் போலார் மற்றும் காலநிலை ஆராய்ச்சியாளர்
ஜிபிங் ஜாங் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news