விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா, பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 47.5 ஓவர்களில் 270 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது. அந்த அணியின் டி காக் மிக சிறப்பாக விளையாடி 106 ரன்கள் குவித்து அவுட்டானார். மேலும், கேப்டன் பவுமா 48 ரன்னில் அவுட் ஆனார்.
இந்திய அணி 271 ரன்கள் எடுத்து வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கியது. இந்திய அணி அதற்கான இலக்கை 39.5 ஓவர்களில், ஒரு விக்கெட் இழப்பில் 271 ரன்கள் எடுத்து அடைந்து அபார வெற்றியை பெற்றது. இந்திய அணி ஜெய்ஸ்வால் 116 ரன்களும், விராட் கோலி 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கோலி புதிய சாதனை:
இந்த தொடரில் 2 சதங்கள் மற்றும் 1 அரைசதம் அடித்த விராட் கோலி, தொடரின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம், கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற வீரராக, முந்தைய சாதனைக்காரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
சச்சின் 19 முறை தொடர் நாயகன் விருது வென்றிருந்தார், ஆனால் கோலி 20 முறை இதனை வென்றுள்ளார். இந்த பட்டியலில், ஷாகிப் அல் ஹசன் 17 முறை தொடர் நாயகன் விருது வென்று 3வது இடத்தில் உள்ளார்.
