ஆசியகோப்பை தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்களுக்கு, பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு மையத்தில் உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டது. இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், முன்னணி வீரர் பும்ர உள்ளிட்டோர் இந்த சோதனையில் பங்கேற்று தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில், லண்டனில் இருந்தபடியே விராட் கோலி தனது உடற்தகுதியை உறுதிப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மற்ற இந்திய வீரர்கள் பெங்களூரு வந்து உடற்தகுதியை நிரூபிக்கையில், லண்டனில் இருந்தபடியே விராட் கோலி. உடற்தகுதியை நிரூபித்துள்ளார்.
பிசிசிஐ அனுமதியுடன் லண்டனில் உடற்தகுதியை நிரூபித்திருந்தாலும், ரோஹித் உள்ளிட்ட மற்ற வீரர்கள் வரும்போது விராட் கோலிக்கு மட்டும் விலக்கு ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.