சில தினங்களுக்கு முன் இணையத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. பொதுவாக வைரல் வீடியோ என்றாலே அந்நேரத்தில் பார்த்துவிட்டு அடுத்து நம் வேலையை பார்க்க ஆரமிச்சுடுவோம்.
அனால் இந்த வீடியோ வெளியாகியதில் இருந்து தற்போதுவரை இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நம்மில் பலருக்கும் ஊக்கமளிக்கும் விதம் உள்ள வீடியோவில் வரும் இளைஞரின் செயல் சிலமணி நேரங்களில் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தது.
இதன் எதிரொலியாக அந்த இளைஞருக்கு தேடிவருகிறது உதவிகள் . அப்படி இந்த இளைஞர் என்ன பண்ணாருன்னு பார்ப்போம் வாங்க ,
சில தினங்களுக்கு முன் , திரைப்பட தயாரிப்பாளரும், எழுத்தாளருமான வினோத் கப்ரி தன் இணையதள பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டார் .அதில் , 19 வயது இளைஞர் ஒருவர் நள்ளிரவில் நொய்டா சாலையில் ஓடிக்கொண்டு இருந்தார் . அவருக்கு உதவ நினைத்த கப்ரி ,அந்த இளைஞரை அணுகியபோது அவரின் உதவியை மறுத்துவிட்டார் இந்த இளைஞர் .
மேலும் தான் இந்திய இராணுவத்தில் சேர விரும்புவதால், தினம் இதுபோன்று 10 கிலோ மீட்டர் வேலை பார்க்கும் இடத்திலிருந்து வீட்டுற்கு ஓடியே சென்றுவிடுவேன் , வேலைப்பளு காரணமாக பயிற்சிக்கு தனியாக நேரம் ஒதுக்கவில்லை. தன் தாய் உடம்பு சரியில்லாமல் மருத்துவமையில் உள்ளார். சகோதரன் உடன் தங்கி உள்ளேன் என கூறினார்.
இணையத்தில் தீயாய் பரவிய இவரின் வீடியோ பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து ,
பிரதீப் மெஹ்ராவின் போராட்டம் மற்றும் அவரது ஆர்வத்தைப் பற்றி அறிந்ததும், உ.பி அரசும் உதவிக்கரம் நீட்டியுள்ளது. பிரதீப்பை கவுதம் புத் நகர் டிஎம் சுஹாஸ் அந்த இளைஞர் தன் அலுவலகத்திற்கு அழைத்து அவரின் பிரச்சனைகளை நிதானமாக கேட்டறிந்தார்.
தான் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாகவும், பட்டப்படிப்பில் சேர முடியவில்லை என்றும் டிஎம்மிடம் பிரதீப் கூறினார். நாட்டிற்கு சேவை செய்ய இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பது அவரது விருப்பம், அதற்காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, தனக்குப் படிக்க பல நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து சலுகைகள் வந்துள்ளதாக பிரதீப் டிஎம்மிடம் தெரிவித்தார். அனைத்து கல்வி நிறுவனங்களும் அவரை இலவசமாக சேர்க்க தயாராக உள்ளன. மேலும் அவரின் தாயர் உடன்நிலை குறித்தும் கவுதம் புத் நகர் டிஎம் சுஹாஸ் கேட்டறிந்தார்.