கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள குண்டல்பேட்டை அருகே பொம்மலப்புரா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சமீப காலமாக புலிகள் அட்டகாசம் செய்து வந்துள்ளது. புலியைப் பிடிக்க வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும், வனத்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், புலியைப் பிடிக்க வந்த 10 வனத்துறை அதிகாரிகளை அந்த புலியை பிடிக்க வைத்திருந்த அதே கூண்டில் வைத்து பூட்டினர். சம்பவம் குறித்து அறிந்ததும் அங்கு வந்த வனத்துறை ஏசிஎப் அதிகாரிகள் கிராம மக்களை சமாதானப்படுத்தி பூட்டப்பட்ட அதிகாரிகளை விடுவித்தனர்.