Monday, December 29, 2025

ரெய்டுக்கு சென்ற போலீசை அடித்து விரட்டிய கிராம மக்கள்.., பீகாரில் அதிர்ச்சி

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான முந்தைய அரசு, கடந்த 2016 ஆம் ஆண்டும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியது. இருப்பினும் சில பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதை கட்டுப்படுத்த போலீசார் அவ்வப்போது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜமுய் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, அங்கு துப்பாக்கியுடன் சென்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து அடுத்த நிமிடமே பெண்கள், சிறுவர்கள் என ஒட்டுமொத்த கிராமமும் போலீசாரை அடித்து ஓட விட்டுள்ளனர்.

இதையடுத்து போலீசார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் ஒரு சிலர் துப்பாக்கியை பறிக்க முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் ஒரு பெண் காவலர் உட்பட நான்கு போலீசார் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆறு பெண்கள் உட்பட 13 பேரை கைது செய்துள்ளனர்.

Related News

Latest News