Monday, December 23, 2024

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கைது

திருப்பத்தூர் அருகே, நில அளவீடு செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், அடுத்த கொரட்டி தண்டுக்கானுர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தனது நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க வேண்டும் என கொரட்டி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு இருந்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வெண்ணிலா. முருகனிடம் நிலத்தை அளவீடு செய்வதற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணமாக கேட்டுள்ளார்.

இது குறித்து முருகன் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி, சம்பவ இடத்துக்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய போது, கிராம நிர்வாக அலுவலக உதவியாளரை கையும் களவுமாக கைது செய்தனர்.

Latest news