Monday, March 31, 2025

‘வீர தீரன் சூரன்’ பட விவகாரம் : தடையை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு

விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இதனிடையே OTT உரிமம் விற்கப்படும் முன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால், அதனை எதிர்த்து B4U என்ற தயாரிப்பு நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் படத்தை வெளியிடுவதற்கு ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்தது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், 7 கோடி ரூபாயை உடனடியாக டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

வீர தீரன் சூரன் படத்தை வெளியிடுவதற்கான தடை, மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தது. திட்டமிட்டபடி இன்று படம் வெளியாகததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Latest news