கரூர் சம்பவத்திற்கு பின் சைலண்ட் மோடில் இருந்த தவெக, தற்போது அரசியல் செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது.
இதில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். முதலாவதாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அக்கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 12 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமாக 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்கியும், முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய்யை அறிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
