கரூர், வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட தேர்தல் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி 41 பேர் பலியாகினர்.
இந்நிலையில் திமுக துணை பொதுச் செயலாளரும் மக்களவை எம்.பி.யுமான கனிமொழி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது கரூர் துயரச் சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:
’’கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களோடு உடனடியாக நின்றது திமுக, தமிழக அரசு. மக்களுக்கு ஆதரவாகத்தான் இருக்க வேண்டும். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல. கரூர் துயரம் குறித்து அவதூறு பரப்பக் கூடாது. குற்றம் சொல்வது தேவையில்லாத ஒன்று.
ஒரு ஆறுதல் கூட சொல்லாமல், தன்னுடைய பாதுகாப்பை மட்டுமே நினைத்து ஒரு தலைவர் அங்கிருந்து சென்றது, இதுவரை நான் பார்த்திராத ஒன்று. பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்க்க வேண்டும். ஆனால் அவர்கள் சென்று பார்க்கவோ, உதவவோ இல்லை. இது மனிதாபிமானமே இல்லாத ஒன்று என அவர் கூறியுள்ளார்.