ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி திரையறையில் வெளியாகவுள்ளது. இதற்கான ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில், டிசம்பர் 27ம் நாள் நடைபெற உள்ளது. ரசிகர்கள் இந்த நிகழ்வை மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் முடிந்து, தற்போது இறுதி பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 121 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தெரிய வருகிறது. மேலும், படத்தின் சேட்டிலைட் உரிமம் ஜீ தமிழ் நிறுவனம் சுமார் 40 கோடி ரூபாய் செலுத்தி வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமங்களின் மொத்த வியாபாரம் 150 கோடி ரூபாய்க்கும் மேலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
