Wednesday, February 18, 2026

வெளியாகும் விஜய்யின் படம்!! ரசிகர்கள் குஷி!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவரது படம் திரையரங்குகளில் வந்தாலே திருவிழா தான். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது. ஆனால் இந்த ஆண்டு ரசிகர்கள் கொண்டாடும் வகையில் எந்த படமும் வெளியாகவில்லை. தற்போது இந்த கவலை இல்லை. தளபதி திரைப்படம் வெளியாகிறது.

விஜய்யின் எவர்கிரீன் ஹிட் திரைப்படம், கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய், ஜோதிகா உடன் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி என பலர் நடித்திருந்தனர். தேவாவின் இசையில் இந்த திரைப்படத்தின் ஆறு பாடல்களும் ஹிட் ஆகின.

2000 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.மேலும், விஜய்யின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக குஷி அமைந்தது. இந்த நிலையில் குஷி திரைப்படம் வரும் 25ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News