தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் சனிக்கிழமை தோறும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
முதலில் நாமக்கலில் சேலம் சாலையில் உளள் கே.எஸ். தியேட்டர் அருகே, மக்களை சந்தித்து தற்போது தான் உரையாற்றினார். அவர் பேசும் இடத்தில் அதிக அளவிலான தொண்டர்கள் கூடியுள்ளனர்.
இதற்கிடையே கூட்டத்திற்கு நடுவே, திடீரென ஆம்புலன்ஸ் வேன் ஒன்று வந்தது. உடனே தொண்டர்களை, ஆம்புலன்ஸ் தடையின்றி விரைவாக செல்ல வழிகள் ஏற்படுத்திக் கொடுத்தனர்.
இதனால் ஆம்புலன்ஸ் தொண்டர்களை கூட்டத்தை சிரமம் இல்லாமல் கடந்து சென்றது. விஜய்க்கு வரும் வழியில் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஒரு தொணடர் திரிசூலம் வழங்கியதை விஜய் ஏற்றக் கொண்டார்.