தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 120-லிருந்து 140 ஆக அதிகரிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே த.வெ.க.வில் 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் மேலும் 19 மாவட்ட செயலாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக சபரிநாதனை (27) த.வெ.க தலைவர் விஜய் அறிவித்துள்ளார். சபரிநாதனின் தந்தை ராஜேந்திரன் விஜயின் கார் ஓட்டுநராக பணியாற்றினார். தற்போது விஜயின் உதவியாளராக உள்ளார்.