ம.தி.மு.க. நிர்வாகக் குழுக்கூட்டம் இன்று எழும்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது :
அவசரகதியில் செய்யப்படும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை என்பது மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.
தற்போது திராவிட இயக்கம் இருக்க கூடாது என தமிழகத்தில் நினைக்கிறார்கள். அதனால் தான் திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதனால் தான் ம.தி.மு.க., தி.மு.க. உடன் கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறோம்.
பொதுக்குழுவில் விஜய் தி.மு.க.வை மிக மோசமாக விமர்சித்து இருக்கிறார். உயிரிழந்த 41 பேர் குடும்பத்தை கரூர் சென்று சந்திக்காமல் மாமல்லபுரம் வரவைத்து சந்தித்தது இதுவரை நடக்காதது. இது மிகப்பெரிய பித்தலாட்டம்.
எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என விஜய் பேசுகிறார். அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர் விஜய். காகித கப்பலில் கடல் தாண்ட நினைக்கிறார். அவர் கனவு பலிக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
