Sunday, December 28, 2025

விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம் : அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக தேமுதிக கடைபிடித்து வருகிறது.

இந்நிலையில் இன்று விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் கட்சி தொண்டர்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Related News

Latest News