Tuesday, July 29, 2025

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிகையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், இளைஞர் அணி செயலாளராக வி.விஜய பிரபாகர், இன்று (ஏப்.30) முதல் நியமிக்கப்படுகிறார்.

அவருக்கு கழக நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து தேமுதிக திராவிடகழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ஜனவரி 9-ல் கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறும் என்றார். மேலும், கூட்டணி குறித்து தேர்ந்தல் நெருங்கும்போது முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News