விஜய் ஏமாந்துதான் போவார் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அதிமுக வாக்குகளை பெற நினைத்தால் விஜய் ஏமாந்துதான் போவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அண்ணா மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்களை பயன்படுத்துவதால் அதிமுக வாக்குகள் விஜய்க்கு செல்லாது என தெரிவித்தார்.

அதிமுக வாக்குகள் எப்போதும் இரட்டை இலை சின்னத்திற்கு மட்டும்தான் என்றும், எம்ஜிஆர் புகைப்படத்தை காட்டி அதிமுக வாக்குகளை பெற நினைத்தால் விஜய் ஏமாந்து போவார் என்றும் விமர்சித்தார். செங்கோட்டையன் விவகாரம் குறித்து பேசிய ஜெயக்குமார், செங்கோட்டையனின் ஒருங்கிணைப்பு முயற்சி குறித்து எடப்பாடி பழனிசாமிதான் முடிவெடுப்பார் என கூறினார்.

Related News

Latest News