Thursday, October 2, 2025

அவங்க சொன்னா விஜய் உடனே கைது: திமுக பிரபலம்!!

நடிகரும், தவெக தலைவருமான விஜய், கரூரில் அரசியல் பிரச்சாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் பற்றி தவெக தலைவர் விஜய் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் தவெக கட்சியில் இரண்டாம் நிலையில் உள்ள புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரூர் சம்பவம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து தனிநபர் ஆணையம் ஒன்றை தமிழ்நாடு அரசு நியமித்து இருக்கிறது. அருணா ஜெகதீசன் ஆணையம் தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இதக்கிடையே கரூர் சோகம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட விஜய், மன்னிப்புக் கூட கேட்கவில்லை. மாறாக கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று கேள்வி எழுப்பியதோடு உண்மை விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்தார். அத்துடன், முதல்வர் பழிவாங்க வேண்டும் என்றால் தன்னை கைது செய்யட்டும் என்றும், தொண்டர்கள் மீது கைவைக்க வேண்டாம் என்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டியில் புஸ்ஸி ஆனந்த் அங்கேயே இருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யக் கூடியவர். விஜய் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவே வருகிறார். முதலில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதுதான் முறை, அதனை காவல் துறை செய்துள்ளது. அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையம் விசாரணை செய்து, அது தரும் அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கைகள் இருக்கும். ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமே என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ளத்தான்” என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் ‘அருணா ஜெகதீசன் ஆணையம் விஜய்யை கைது செய்ய சொன்னால் உடனே விஜய் கைது செய்யப்படுவார்” என கூறி இருக்கிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News