தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடந்தது. கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக விஜய் ஆளுநரை சந்தித்துள்ளார்.
அப்போது அண்ணா பல்கலை கழக மனைவி பாலியல் பலாத்கார வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆளுநரிடம் வைத்துள்ளார்.
ஆளுநர் சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களை விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் செய்தியாளர்களை சந்திக்காமல் கையசைத்து விட்டு சென்றுள்ளார்.