Thursday, February 5, 2026

விஜய் தலைமையில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. நேற்று புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

இந்நிலையில் பனையூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நாளை (11-12-2025) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள், சிறப்பு தீவிர திருத்தம், அடுத்த கட்ட மக்கள் சந்திப்பு பயண ஏற்பாடுகள் குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related News

Latest News